• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பீரில் தூசிகள் மிதந்ததால் குடிமகன் அதிர்ச்சி

January 28, 2023 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 9வது வீதியில் டாஸ்மாக் கடையில் வாங்கிய பீர் பாட்டிலில் தூசி இருந்ததால் குடிமகன் அதிர்ச்சியடைந்தார்.

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 9வது வீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடை மாநகரின் மையப்பகுதியில் உள்ளதால் இங்கு மது விற்பனை மிகவும் ஜோராக நடக்கும். மாநகர் பகுதியில் உள்ள அலுவலகங்களில் பணிபுரிவோர், கட்டிட தொழிலாளர்கள், கடை வியாபாரிகள், கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், கூலி தொழிலாளிகள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் இங்கு மது வாங்கிவிட்டு அருகில் உள்ள பாரில் மது அருந்துவார்கள்.

இந்நிலையில் இன்று மதியம் கோவை பெரியகடை வீதி பகுதியை சேர்ந்த மணிகண்டன்(38) என்பவர் இக்கடையில் பிரிட்டிஷ் எம்பையர் பீர் வாங்கி உள்ளார். நண்பர்களுடன் அருகில் உள்ள பாருக்கு சென்று அந்த பீர் பாட்டிலை பார்த்த போது அதில் மிகவும் சிறிய அளவிலான தூசிகள் மிதந்து உள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார் ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

மேலும் படிக்க