July 24, 2018
தண்டோரா குழு
பீகாரில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோவை சூலூர் விமானப்படையில் பணிபுரியும் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீஹார் மாநிலம் அவுரங்கபாத் பகுதியை சேர்ந்தவர் பப்புகுமார். கோவை சூலூர் விமானப்படையில் தொழில்நுட்ப உதவியாளராக பணியாற்றி வருகிறார்.இவர் அவுரங்கபாத் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாகவும்,திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பப்புகுமாரை கைது செய்ய பிடிவாரண்டுடன் பாட்னா அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பார்வதி குமாரி தலைமையில் 3 பேர் கொண்ட குழு கோவை வந்தனர்.
சூலூர் காவல் நிலைய போலீசார் உதவியுடன் பப்புகுமாரை கைது செய்த பாட்னா போலீசார் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பப்புகுமாரை ஆஜர்ப்படுத்தினர்.இதனையடுத்து பப்புகுமாரை பீகார் அழைத்துச் செல்ல நீதிபதி நாகராஜன் அனுமதியளித்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை ரயில் மூலம் பீகார் அழைத்துசென்றனர்.வரும் 27ம் தேதி பீகாரில் நீதிமன்றத்தில் பப்புகுமாரை ஆஜர்படுத்த உள்ளனர்.