May 3, 2018
தண்டோரா குழு
பீஹார் மாநிலம் மோதிஹாரி பகுதியில்,பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து தீப்பிடித்து விபத்திற்குள்ளானது.
பீஹார் மாநிலம் மோதிஹாரி பகுதியில்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.இதில்,யாரும் எதிர்பாராத வகையில் பேருந்து திடீரென தீ பிடித்தது எரிந்தது.இதில் பேருந்தில் பயணித்த 27 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து,சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.பஸ் தீ விபத்து ஏற்பட்டதில் அந்த பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.