ஒவ்வொரு கல்லூரிக்கும் முன்னால் மாணவர்கள் ஆணிவேர்கள் போன்றவர்கள் என்றும் தற்போது கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு முன்னால் மாணவர்களின் சாதனைகள் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.தொழில்நுட்ப கல்லூரியில் முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக நடைபெறும் இதில்,2008 ஆம் ஆண்டு முதல் படித்த பல்வேறு துறை சார்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நிகழ்ச்சியில் கல்லூரியில் படிக்கும் போது பெற்ற அனுபவங்களையும்,தற்போது பல்வேறு துறைகளில் நல்ல நிலைகளில் பணியாற்றி வரும் அனுபவங்களையும் மாணவ, மாணவிகள் பகிர்ந்து கொண்டனர்.
முன்னதாக பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு பேசுகையில், ஒவ்வொரு கல்லூரிக்கும் முன்னால் மாணவர்கள் ஆணிவேர்கள் போன்றவர்கள் என்றும் தற்போது கல்லூரிகளில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு முன்னால் மாணவர்களின் அனுபவங்கள் மற்றும் சாதனைகள் ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில் பி.பி.ஜி. கல்விக் குழுமத்தின் தாளாளர் சாந்தி தங்கவேலு,துணை தலைவர் அக்ஷய், கல்லூரி முதல்வர் முனைவர் சத்தியசீலன்,கல்லூரி மேராசிரியர்கள், ஊழியர்கள் மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு