• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி ஜி ஆர் விவகாரம் சம்பந்தமாக உரிய ஆவணங்களை கொடுத்தால் விளக்கம் அளிக்க தயார் – அமைச்சர் செந்தில் பாலாஜி

March 26, 2022 தண்டோரா குழு

இருபத்தி நான்கு மணி நேர சேவை மையம் பொது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பி ஜி ஆர் விவகாரம் சம்பந்தமாக உரிய ஆவணங்களை கொடுத்தால் விளக்கம் அளிக்க தயார் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார் மேலும் அங்கு உள்ள பணியாளர்களிடம் எவ்வாறு செயல்படுகிறது எந்த மாதிரியான சேவை கழகம் அழிக்கப்படுகிறது. அதை எவ்வாறு உரிய நேரத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தெல்லாம் ஆலோசனைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்,

பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக அவர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக இந்த 24 மணி நேர சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுவரை சாலை வசதிகள் பாதாள சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு 1749 அழைப்புகள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

சில புகார்களை உரிய கால அவகாசத்தில் முடித்து வைத்து இருக்கிறோம் மேலும் இந்த சேவை மையத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது பி ஜி ஆர் டெண்டர் விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சர் செந்தில்பாலாஜி சில பேரின் தனிநபர் விளம்பரத்திற்கு சொல்லக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு நான் அன்றைய பொழுதை கழித்துவிட்டு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு டிஜிஆர் டெண்டர் விவகாரம் தொடர்பாக உரிய ஆதாரங்களோடு ஆவணங்களை வழங்கினால் அது குறித்து நான் பதில் அளிக்க தயாராக உள்ளேன் என்றார்.

மேலும் படிக்க