• Download mobile app
24 Jan 2026, SaturdayEdition - 3636
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ். ஜி மருத்துவ மருத்துவமனைக்கு பிறவிலேயே காது கேட்காதவர்களுக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை கண்டறியும் பரிசோதனை கருவி வழங்கல்

June 3, 2025 தண்டோரா குழு

சாந்தி ஆசிரமம், எம் ஐ.டி மருத்துவக் குழு இணைந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான பிறவிலேயே காது கேட்காதவர்களுக்கு காது கேட்கும் திறன் இல்லை என்பதை கண்டறியும் பரிசோதனை கருவியினை பி.எஸ். ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் சாந்தி ஆசிரமம் தலைவர் டாக்டர் கே. கேசிவினோ அரம், ஜெர்மனியை சேர்ந்த எம்.ஐ.டி மருத்துவக் குழு டாக்டர்கள் பாரூன் சர்க்கார், ரோலன், பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜே.எஸ் புவனேஸ்வரன், பி. எஸ்.ஜி மருத்துவமனை இஎன்டி தலைமை ஆலோசகர் டாக்டர் தயானந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,

சர்வதேச பொது சுகாதார மையம், ஜெர்மனியை சேர்ந்த எம்.ஐ.டி மருத்துவ குழு, சாந்தி ஆசிரமம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால், பிறவியிலேயே காது கேட்காதவர்களை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து அவர்களுக்கு இலவசமாக காது கேட்கும் கருவியினை வடிவமைத்து கடந்த 4 ஆண்டுகளாக வழங்கி வருகிறோம்.

இதுவரை 41,424 குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 63 குழந்தைகளுக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான இரட்டை காது கேட்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காது கேட்பு கருவியும் ரூ.2.5 லட்சம் மதிப்புடையது. பி.எஸ்.ஜி மருத்துவமனைக்கும் ரூ.30 லட்சம் மதிப்பிலான பிறவியிலேயே காது கேட்கும் திறன் அற்றவர்களை கண்டறியும் பரிசோதனை கருவி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொடர்ந்து பரிசோதனைகள் மூலம் காது கேட்கும் திறன் அற்றவர்களை கண்டறிந்து அவர்களுக்கு காது கேட்பு கருவிகள் வழங்கப்பட உள்ளது என்றனர்.

மேலும் படிக்க