September 30, 2025
தண்டோரா குழு
பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனர் நாள் பி. எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் டாக்டர். டி.எம்.சுப்பாராவ் அனைவரையும் வரவேற்றார்.
பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் தலைமையுரை ஆற்றினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் பிலிப் ஆகஸ்டின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரிக்கு உலகப்புகழைப் பெற்றுத்தந்த 4 சிறந்த முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இதில் முன்னாள் மாணவர்களான லண்டன் யுனிவர்சிட்டி ஹாஸ்பிட்டல் ஆஃப் பிளைமத்-ல் குடல்வாய் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர்.ராஜேஷ் டி.கொச்சுபாபி,
சென்னை தாமிர ஏஸ்தெடிக் ஹெல்த்கேர் மற்றும் லைப்ஸ்டைல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், மருத்துவருமான டாக்டர். ஜெயந்தி ரவீந்திரன்,கோவை கங்கா மருத்துவமனையின் குழந்தைகள் எலும்பியல் அறுவைசிகிச்சை துறையின் தலைமை மருத்துவர் டாக்டர்.கே.வெங்கடதாஸ்,
யு.எஸ்.ஏ மெர்சி மெடிக்கல் குழுமத்தில் குடல்,கல்லீரல்,கணைய சிகிச்சை நிபுணராக உள்ள டாக்டர்.பழனியப்பன் மாணிக்கம் ஆகியோருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இறுதியாக,பி.எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர்.ஆர். கார்த்திகேயன் நன்றியுரை கூறினார்.