March 9, 2020
தண்டோரா குழு
கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெல் உமன் கிளினிக் எனும் பெயரில் பெண்களுக்கான பிரத்யேக மகளிர் ஆரோக்கிய ஆலோசனை மையம் இன்று காலை தொடங்கப்பட்டது.
பி.எஸ்.ஜி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி வி.விமலா இந்த மையத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த மையத்தில் பெண்களுக்கான பிரத்யேக சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்பட உள்ளது. கருவுறுதல் சார்ந்த சந்தேகங்கள், கருவுறுதலுக்கு முந்தைய பிரச்சனைகளுக்கான கலந்தாலோசனை, மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான கலந்தாலோசனை, பெண்களுக்கு வரும் நோய்களைத் தடுப்பது பற்றி ஆலோசனை ஆகியவை வழங்கப்பட உள்ளது.
மேலும், மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த மாதம் முழுவதும், மார்பக பரிசோதனைகள் குறைந்த கட்டணத்தில் அளிக்கப்பட உள்ளது. மார்பக புற்றுநோய் குறித்த சந்தேகங்களை 82200 13330, 97153 25252 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பேசலாம்.