• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி எஸ் ஜி மருத்துவமனையின் “காமதேனு” தாய்ப்பால் வங்கி துவங்கப்பட்டு ஓராண்டு நிறைவு!

August 1, 2023 தண்டோரா குழு

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள் மற்றும் நோய் எதிர்ப்பாற்றலை வழங்குவதால், இதுவே இன்றியமையாத மற்றும் ஆரோக்கியமான உணவாக உள்ளது. ஏதேனும் காரணத்தினால் பெற்ற தாயின் பால் கிடைக்காத அல்லது போதுமானதாக இல்லாத சூழ்நிலையில் அடுத்த சிறந்த தேர்வாக தானமாக பெறப்பட்டு pasteurise செய்யப்பட்ட தாய்ப்பாலே ஆகும்.

குறைப்பிரசவ குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள் மற்றும் குடல் தொற்றால் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கு தனமாக பெறப்படும் தாய்ப்பால் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தற்போது இந்த தாய்ப்பால் வங்கியின் பயன்கள் உலகளவில் அதிக கவனத்தை பெற்றுள்ளது.இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கோவை மாநகரில் பி எஸ் ஜி மருத்துவமனையில்’காமதேனு’ தாய்ப்பால் வங்கியானது கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாய்ப்பால் வார விழாவின் போது துவங்கப்பட்டது. எவ்வித லாபநோக்கமின்றி செயல்பட்டு வரும் இந்த தாய்ப்பால் வங்கியின் மூலம் கடந்த ஒரு வருடத்தில் 89 தாய்மார்கள் மூலமாக தாய்ப்பால் தானமாக பெறப்பட்டு பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெட்ரா 104 குழந்தைகளின் தாய்ப்பால் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.

பி எஸ் ஜி மருத்துவமனையின் “காமதேனு” தாய்ப்பால் வங்கி துவங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி இந்த நாளை சிறப்பு தினமாக இன்று (ஆகஸ்ட் 1, 2023) கொண்டாடியது. இந்த ஓராண்டு நிறைவு விழாவின் சிறப்பு அம்சமே இதனை செயல்படுத்தும் தூண்களாக நாங்கள் கருதும் தாய்ப்பால் தானம் செய்த “தாய்மார்கள்” மற்றும் அதனை ஊக்குவித்த அவர்களது குடுமபத்தினருமே ஆகும். இந்த நன்னாளில் அவர்கள் அனைவருக்கும் மாபெரும் நன்றியினை உரிதாக்கிக்கொள்வதோடு அவர்களைப் பாராட்டி சான்றிதழ் அளித்து கௌரவிக்கப்பட்டனர்.

தாய்ப்பால் வங்கி செய்யப்படும் முறை பற்றிய விளக்கம் :

1. தாய்ப்பால் தானம் செய்ய விரும்பும் தாய்மார்களின் உடல்நலம் உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் சில இரத்த பரிசோதனைகள் செய்யப்பட்டு அதன் அறிக்கைகள் முடிவில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

2. தாய்ப்பால் தானம் செய்வதற்கான ஒப்புதல் வாங்கப்பட்டு தாய்மார்களின் விபரம் பதிவு செய்யப்படும்.

3. தாய்ப்பாலை எடுக்கும் பாதுகாப்பான முறைகள் மற்றும் தேவையிருப்பின் பம்பிங் சாதனத்தை பயன்படுத்தி தாய்ப்பால் எடுக்கும் முறை போன்றவற்றை தாய்மார்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது.சரியான முறையில் தாய்ப்பால் சேகரிப்பு, சேமிப்பு மற்றும் தாய்ப்பால் வங்கிக்கு கொண்டு சேர்க்கும் முறை ஆகிய அனைத்தும் தாய்மார்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது.

4. பெயர் மற்றும் தானம் பெறப்பட்ட நாள் போன்ற குறிப்புகள் ஒட்டப்பட்டு 20 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் ஆழமான உறைவிப்பான் ஒன்றில் சேமிக்கப்படும்.

5. மூலம் சுகாதாரமான முறையில் பதப்படுத்தப்பட்டு நுண்ணியிரியல் ஆய்வு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்படும்.

6. நுண்ணுயிரியல் ஆய்வக முடிவு வரும்வரை உறைவிப்பான் பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படும். உபயோகிக்க உகந்ததாக அறிக்கை கிடைத்த உடன் தேவையுள்ள குழந்தைகளுக்கு கிடைப்பதற்காக க்கு மாற்றப்படும்.

7. குழந்தை மருத்துவரின் உத்தரவின்படி குழந்தைகளின் பெற்றோர் ஒப்புதல் பெறப்பட்டு தேவையுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

8. இதற்கு இடைப்பட்ட காலநேரத்தில் தாய்ப்பாலூட்டுதல் குறித்த விளக்கங்களும், அவசியங்களும் மூலமாக குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை அளிக்கப்படும்.

“காமதேனு” தாய்ப்பால் வங்கியின் தலைவராக பி எஸ் ஜி மருத்துவமனையின் குழந்தைகள் நல சிகிச்சை துறையின் பேராசிரியர் டாக்டர் எஸ் ரமேஷ் அவர்கள் உள்ளார். இவ்வங்கியின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், பணிபுரிவதற்காகவும் உள்ள பிரத்யேக குழுவில் டாக்டர்.மஞ்சரி, டாக்டர்.சுமதி மற்றும் செவிலியர். கவிதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது பி எஸ் ஜி மருத்துவமனையிலுள்ள பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே தேவையின் அடிப்படையில் இந்த சேவை செயல்பாட்டில் உள்ளது. வரும் நாட்களில் தேவையுள்ள தகுதியான மற்ற மருத்துவமனை குழந்தைகளுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த முனைகிறோம். இதுவரை கடந்த ஆண்டில் தாய்ப்பால் தானம் அளித்தவர்கள் பி எஸ் ஜி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற தாய்மார்களே ஆவர்.ஆனால் நாங்கள் வெளியில் உள்ள தாய்மார்களிடமிருந்தும் தாய்ப்பால் தானம் செய்ய எதிர்பார்க்கின்றோம். வெளிநன்கொடையாளர்களும் எங்களது வங்கிக்கு வந்து தாய்ப்பால் தனமாக அளிக்கலாம்.

தேசிய வழிகாட்டுதலின்படி தாய்ப்பால் தானம் பெற்று மேற்கூறிய அனைத்து சேவைகளையும் செய்து வருவதால் பி எஸ் ஜி மருத்துவமனையை “விரிவான பாலூட்டுதல் மேலாண்மை மையம்(CLMC)என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

மேலும் படிக்க