பி.எஸ்.ஜி மருத்துவமனையின் 35 வது மருத்துவமனை தினம் இன்று மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.
பிஎஸ்ஜி மருத்துவமனை கடந்த 1989ஆம் ஆண்டு நவம்பர் 15 மாதம் துவங்கப்பட்டது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் பி.எஸ்.ஜி
மருத்துவமனை துவங்கப்பட்ட நாளை மருத்துவமனை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதியான இன்று பி. எஸ்.ஜி மருத்துவமனையின் 35வது
ஆண்டு பவள விழா மருத்துவமனை வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பி.எஸ்.ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் ஜி. ஆர். கார்த்திகேயன், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன், மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன், புற்றுநோயில் சிகிச்சை மையத்தின் இயக்குநர் டாகடர் பாலாஜி, மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சுப்பாராவ், முன்னாள் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ராதாகிருஷ்ணன் உட்பட பல்வேறு துறை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவர்கள் என பி.எஸ்.ஜி. குழும நிறுவன பணியாளர்கள் பங்கேற்றனர்.
மேலும், விழாவில் பி எஸ் ஜி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், மனிதவள மேம்பாடு துறை, மருந்தகம், ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு