• Download mobile app
11 Mar 2026, WednesdayEdition - 3682
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் ‘Polytech Day – 2026’ விழா: மாணவர்களுக்கு பல்வேறு விருதுகள், உதவித்தொகைகள் வழங்கல்

March 11, 2026 தண்டோரா குழு

கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் Polytech Day – 2026 விழா கல்லூரி சென்டினரி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

கல்வி சாதனைகள், மாணவர் மேன்மை மற்றும் கல்லூரியின் பாரம்பரியத்தை கொண்டாடும் நோக்கில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் பி. கிரிராஜ் தலைமையேற்றார்.
சென்னை Fuji Electric India Pvt. Ltd. நிறுவனத்தைச் சேர்ந்த கே. ஜி. தீனதயாளன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். ஆண்கள் மாணவர் சங்க செயலாளர் என்.சர்வின் கிருஷ்ணா வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் டாக்டர் பி. கிரிராஜ் அவர்கள் 2025–2026 ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை வெளியிட்டு, கல்வி சாதனைகள், பேராசிரியர் பங்களிப்புகள், கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் கல்லூரியின் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார்.

மாணவர் சங்கத் தலைவர் கேஷவ் கண்ணா மாணவர் சங்கத்தின் ஆண்டு அறிக்கையை வழங்கி, மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள், தலைமைத்துவ முயற்சிகள் மற்றும் சாதனைகள் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் மாணவர் சங்க துணைத் தலைவர் பி. ஜி. மோனிக்காஸ்ரீ தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

தலைமை விருந்தினர் கே.ஜி. தீனதயாளன் பேசுகையில்,

தாம் 1989 ஆம் ஆண்டு மின் மற்றும் மின்னணுவியல் (DEEE) துறையில் பயின்ற முன்னாள் மாணவர் எனக் கூறி, பல ஆண்டுகளுக்குப் பிறகும் கல்லூரியின் விருந்தோம்பல் மாறாமல் இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மேலும் வாழ்க்கையில் வெற்றி பெற மாற்றங்களை ஏற்றுக்கொள்வது, துணிச்சலுடன் புதிய முயற்சிகளை மேற்கொள்வது மற்றும் தொடர்ந்து கற்றுக் கொண்டே இருப்பது முக்கியம் என வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆய்வு இதழ் – 2026 முதல் பிரதியை கே.ஜி. தீனதயாளன் வெளியிட்டார். பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் பயன்பாட்டு கணிதம் மற்றும் கணக்கீட்டு அறிவியல் இயக்குநரும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி டீனுமான டாக்டர் ஆர். நடராஜன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் மற்றும் மாணவர் விருதுகளை மாணவர் சங்கத்தின் தலைமை ஆலோசகரும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறைத் தலைவருமான டாக்டர் வி. மோகன் சிவகுமார் அறிவித்தார். கல்வி மேன்மை, ஆராய்ச்சி மற்றும் கூடுதல் பாடத்திட்ட சாதனைகளுக்காக பல மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

மொத்தம் 14 முதல் நிலை மாணவர் விருதுகள் மற்றும் 19 கல்வி உதவித்தொகை விருதுகள் வழங்கப்பட்டன.மேலும் ஒட்டுமொத்த சிறந்த வெளியேறும் மாணவர் விருது, சிறந்த NCC கேடட் விருது, சிறந்த NSS தன்னார்வலர் விருது, சிறந்த வெளிச்செல்லும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனை விருதுகள் வழங்கப்பட்டன.

பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் 1984 Batch, சாந்தி சமூக சேவைகள் மற்றும் ப்ளூ ஸ்டார் அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் வழங்கிய ரூ.60,000 மதிப்பிலான 6 உதவித்தொகைகள் மற்றும் ரூ.2,13,257 மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் முடிவில் மாணவர் சங்க செயலாளர் செல்வி எஸ். சிவசங்கரி நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க