கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் நிறுவன தினம் 2024 கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.
பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி சார்பில்
ஒவ்வொரு ஆண்டும் பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களை கவரவிக்கும் வகையில் நிறுவன தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஜி கல்வி குழுமங்களின் அறங்காவலர் எல்.L.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் சுகுணா குழும நிறுவனங்களின் தலைவர் வி.லட்சுமிநாராயணசுவாமி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் விருதுகளை கோயம்புத்தூர் லக்ஷ்மி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தின்
உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தலைவர் எஸ்.ராஜசேகரன், சென்னை
தெற்கு ரயில்வே துணை தலைமை மின்பொறியாளர்எஸ்.ஏ குமார்,புது தில்லி
இந்திய விமானப்படை அதிகாரி ஜிபி கேப்டன் ஜே.ஆனந்தகுமார்,கோவை
ஸ்ரீ பிரியா மெஷின் ஒர்க்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்ரீமதி ஆகியோர் பெற்றனர்.
நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி தலைவர் ஜி.ஆர். கார்த்திகேயன்,பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கிரிராஜ், பி.எஸ்.ஜி நிறுவனங்களின் முதல்வர்கள், அதிகாரிகள், முன்னாள் மாணவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்