• Download mobile app
17 May 2025, SaturdayEdition - 3384
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரியின் முதல்வருக்கு சிறந்த ஆராய்ச்சிகான விருது !

March 5, 2021 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரியின் முதல்வர் மு.இராமநாதன் மூளை சிதைவு நோயின் மருந்து குறித்த ஆராய்ச்சியில் டாக்டர் ஆப் சயின்ஸ் பட்டம் வாங்கி கோவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

கோவை பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரியின் முதல்வராக இருப்பவர் மு.இராமநாதன்.இவர் ஏற்கனவே சர்க்கரை நோய் குறித்த மருந்தியல் ஆராய்ச்சி துறையில் பி.எச்.டி.பிடித்துள்ளார். இந்நிலையில் மேலும் இவர் கடந்த இருபது ஆண்டுகளாக மூளை சிதைவு நோய் தொடர்புடைய மருந்தியல் ஆராய்ச்சி செய்து வந்த இவர்,அதில் வெற்றியும் கண்டு,அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் உயரிய டாக்டர் ஆப் சயின்ஸ் பட்டம் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலை கழகம் இவருக்கு இந்த உயரிய பட்டத்தை வழங்கியுள்ளது. கடந்த 26 ம் தேதி தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் இவருக்கு டாக்டர் ஆப் சயின்ஸ் பட்டம் வழங்கி கஙுரவித்துள்ளார்.

இந்நிலையில் பட்டம் வாங்கி கோவை மற்றும் பி.எஸ்.ஜி.பார்மசி கல்லூரிக்கு பெருமை சேர்த்து முனைவர் இராமநாதனுக்கு, பி.எஸ்.ஜி.மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் புவனேஷ்வர், ஜெகந்நாதன்,ஜெயசுதா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முனைவர் இராமநாதன்,

ஆராய்ச்சியில் ஈடுபடும் இளைய தலைமுறை மாணவர்கள் தங்களது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து அறிவியல் மற்றும் துறை சார்ந்த ஆராய்ச்சிகள் ஈடுபடுவதால் வெற்றி பெற இயலும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க