March 27, 2021
தண்டோரா குழு
கோவை நீலம்பூரில் உள்ள பி.எஸ்.ஜி பயன்சார் ஆராய்ச்சி நிலையத்தில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று காலை கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கலந்துகொண்டு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
சுமார் 270 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. 25 பேருக்கு தங்கப்பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. பி.எஸ்.ஜி அறக்கட்டளையை நிறுவன அறங்காவலர் ஜி.ஆர் கார்த்திகேயன் தலைமை உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பி.எஸ் ஜி கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர்கள் எல்.கோபாலகிருஷ்ணன்,செயலாளர் மோகன் ராம், கல்லூரி முதல்வர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.