• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

June 24, 2024 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று மாலை கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சித்ரா வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஜி அன்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு மற்றும் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மைக்ரோசாஃப்ட் ரிசர்ச் இந்தியாவின் நிறுவன துணைத் தலைவரும்,நிர்வாக இயக்குனருமான டாக்டர் ஸ்ரீராம் ராஜாமணி, 2024 ம் ஆண்டு அறிவியல் பாடங்களை படித்த 309 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இதில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம். எஸ் சி மென்பொருள் அமைப்புகள், கோட்பாட்டு கணினி அறிவியல், தரவு அறிவியல், சைபர் பாதுகாப்பு, ஃபேஷன் வடிவமைப்பு மற்றும் வணிகம் பட்டப்படிப்பும் , 2 ஆண்டு எம்.எஸ்.சி அப்ளைடு கணிதம், மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் மற்றும் பி.எஸ் சி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் மற்றும் வடிவமைப்பு, பயன்பாட்டு அறிவியல் பட்டப்படிப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் கல்லூரி ஆலோசகர் பிரகாசம், பேராசிரியர்கள்,மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க