• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ். ஜி தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழா

July 8, 2023 தண்டோரா குழு

கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னனு மற்றும் அதனுடன் சார்ந்த பொறியியல் படிப்புகளின் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று மாலை கல்லுரி வளாகத்தில் கல்லூரி கலையரங்த்தில் நடைபெற்றது. துறைத் தலைவர் டாக்டர் ஜே.கனகராஜ் வரவேற்புரை ஆற்றினார்.

விழாவில் தலைமை விருந்தினராக ஐ.ஐடி பாலக்காடு இயக்குநர் டாக்டர் சேஷாத்ரி சேகர் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
பி.எஸ்.ஜி கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர்
எல்.கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் டாக்டர். கே. பிரகாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைமை விருந்தினர் டாக்டர் சேஷாத்ரி சேகர் பேசுகையில்,

தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணத்திற்குள் இளம் பொறியாளர்கள் செல்கிறார்கள். மாணவர்கள் தங்களது துறையில், இன்றைய காலகட்டத்திற்கு
ஏற்ப தங்களது திறன்களை வளர்த்து கொண்டு வர வேண்டும். தங்களது துறையை நேசித்து, அதில் புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என்றார்.

விழாவில், பி.எம்.இ, சி.எஸ்.ஈ, இ.இ.இ, இ.சி.இ, ஐ.சி.இ, ஐ.டி மற்றும் ஆர்.ஏ.இ உள்ளிட்ட பல்வேறு பொறியியல் பிரிவுகளைச் சேர்ந்த 783 மாணவர்கள் பட்டங்களைப் பெற்றனர். நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி உறுப்பினர்கள் உட்பட சுமார் 2500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க