• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி பட்டமளிப்பு விழா

June 24, 2023 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் அறிவியல் துறைகளுக்கான பட்டமளிப்பு விழா இன்று மாலை கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

கல்லூரியின் அறிவியல் துறை ஐந்தாண்டு ஒருங்கிணைந்த முதுகலை மென்பொருள் அமைப்புகள்,கோட்பாட்டு கணினி அறிவியல்,தரவு அறிவியல்,இணைய பாதுகாப்பு,ஆடை வடிவமைப்பு மற்றும் வணிகம்,இரண்டு ஆண்டு முதுகலை பயன்பாட்டு கணிதம்,கணினி பயன்பாட்டுக்கான மேல் படிப்பு மற்றும் மூன்று ஆண்டு இளங்கலை கணினி அமைப்புகள் மற்றும் வடிவமைப்பு, பயன்பாட்டு அறிவியல் போன்ற பல்வேறு படிப்புகளை உள்ளடக்கியது. விழாவில் , பி.எஸ்.ஜி பயன்பாட்டு கணிதம் மற்றும் கணக்கீட்டு அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் ர.நடராஜன் வரவேற்புரை வழங்கினார்.

தொடர்ந்து,பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் பொதுக்குழுத் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் விருது வழங்கும் விழா அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ இன்ஃபோசிஸ்,ஈக்வினாக்ஸ்
தலைமை நிர்வாக அதிகாரி
அமித் கல்லே, சிறப்புரையாற்றி, ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மதிப்பெண் பெற்ற 8 பட்டதாரிகளை வாழ்த்திப் பாராட்டினார்.

மேலும், அவர் 220 முதுகலை பட்டதாரிகளுக்கும்,பல்வேறு துறைகளைச் சேர்ந்த 87 இளங்கலை பட்டதாரிகளுக்கும் பட்டச் சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் பொதுக்குழுத் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் உறுதிமொழி வாசிக்கப்பட்டு பரிசளிப்பு விழா நிறைவடைந்தது.

மேலும் படிக்க