• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் கேட்வே 24 எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கு

March 7, 2024 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் கேட்வே 24 (Gateway’24) எனும் தலைப்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் உள்ள ஜி.ஆர்.டி கலையரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது.

விழாவிற்கு பி.எஸ்.ஜி கலை,அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் டி. பிருந்தா தலைமை வகித்தார். கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை இணைப் பேராசிரியை டாக்டர் டி.ரேவதி வரவேற்புரையாற்றினார். கணினி அறிவியல் – தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவர் டாக்டர் பி.ராஜ்தீபா ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் டாக்டர் ஏ.அங்குராஜ் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியின் போது கேட்வே 24 சி.டி மற்றும் எலிவேஷன் 24 (Elevation’24) இதழ் அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினராக ஸ்கை ஹை அகாடமியின் நிறுவனர் டாக்டர்.சி கவுதம் லோகநாதன் கலந்து கொண்டு பேசினார். அவரை துறையின் துணைப் பேராசிரியர் தியாகராஜன் அவையினருக்கு அறிமுகப்படுத்தினார்.தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்தும் தற்போதைய தொழில்நுட்பங்கள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இறுதியில் கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரியர் எஸ்.எம்.சரவணகுமார் நன்றியுரை கூறினார்.தொடர்ந்து மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் விதமாக,ஸ்டார் ஆஃப் தி கேட்வே, பன் இன் ரன், மைண்ட் ஹேக், பன் பெஸ்ட், டெக் பஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.இதில் 33 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பரிசுத் தொகை,சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க