October 30, 2025
தண்டோரா குழு
பி.எஸ்.ஜி சன்ஸ் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் கீழ் இயங்கும் பி.எஸ்.ஜி, இயன்முறை மருத்துவ கல்லூரி தனது நிறுவன நாள் 2025 விழாவை பி.எஸ்.ஜி மருத்துவமனை பி-பிளாக் அரங்கத்தில் கொண்டாடியது.
கல்லூரி முதல்வர் பேராசிரியர் ரா.மகேஷ் அவர்களின் அன்பான வரவேற்புரையுடன் தொடங்கியது.அவர் நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், முன்னாள் மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களை அன்புடன் வரவேற்றார்.பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர்
L. கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார், தனது உரையில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக சேவையில் கல்லூரியின் சிறப்பான பங்களிப்பை வலியுறுத்தினார். மேலும் அவர் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து, அவர்களின் தொழில் துறைக்கான பங்களிப்பை பாராட்டினார்.
சிறப்பு விருந்தினராக மைசூரின் ஜெ.எஸ்.எஸ். இயன்முறை மருத்துவ கல்லூரி முதல்வர், மற்றும் ஜெ.எஸ்.எஸ் மருத்துவமனை புனர்வாழ்வு சேவைகளின் துனை இயக்குநர் டாக்டர் கவிதா ராஜா, நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தொழில்முறை நெறிமுறை மற்றும் கல்வி தலைமைத்துவம் குறித்த தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
அத்துடன், அவர் முன்னாள் மாணவர்களின் சிறப்பான சாதனைகள் மற்றும் சேவைக்கான வாழ்த்துக்களை தெரிவித்தார்.
விழாவின் சிறப்பாக, பி.எஸ்.ஜி , இயன்முறை மருத்துவ கல்லூரியின் மூன்று சிறந்த முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இவ்விருதுகள்,இயன்முறை மருத்துவ துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்த முன்னாள் மாணவர்களின் சிறப்பை பாராட்டும் வகையில் வழங்கப்பட்டன.
பின்னர் விருது பெற்றோர் தங்கள் மனமார்ந்த அனுபவங்களை பகிர்ந்தனர்:
டாக்டர் அசோகன் ஆறுமுகம், இணை பேராசிரியர், ஷார்ஜா பல்கலைக்கழகம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அவர்கள் கடவுளுக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும், மதிப்புக்குரிய விருந்தாளர்களுக்கும் மற்றும் பி.எஸ்.ஜி நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்தார்.அவர் நினைவுகூரும் விசேஷ தருணங்களை பகிர்ந்ததுடன், இயன்முறை துறையின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தினார் மற்றும் உடல் இயக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
யோகேஸ்வரி ராமன், உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமச்சந்திர உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை, அவர்கள் பி.எஸ்.ஜி நிறுவனத்தின் மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். அவர் புனர்வாழ்வு சேவைகளின் முக்கிய மதிப்புகளை வலியுறுத்தி, மாணவர்களுக்கு இயன்முறை துறையின் எதிர்கால வளர்ச்சி மற்றும் விரிவான வாய்ப்புகளை எடுத்துரைத்து ஊக்கமளித்தார்.
ஆனந்த் சிவயோகம், இயக்குனர் மற்றும் நிறுவனர், Movefree Physio Pvt Ltd, Physiox Pvt Ltd, இந்தியா & சிங்கப்பூர், அவர்கள் பி.எஸ்.ஜி நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார். அவர் இயன்முறை மருத்துவ துறையின் அறிவும் திறனும் பற்றி உரையாற்றினார், நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் முக்கியதுவத்தை வலியுறுத்தினார். மேலும் மாணவர்களுக்கு தொடர்ந்து கற்றுக்கொள்வது, தொழில்முறை இனைப்பு உருவாக்குவது மற்றும் சமூக சேவையில் பங்கு பெறுவதை பற்றி ஊக்கமளித்தார்.
அஷ்ரஃப, துனை முதல்வர் தனது நன்றி உரையுடன் நிறைவு செய்தார்.
இவ்விழா, பி.எஸ்.ஜி ,இயன்முறை மருத்துவ கல்லூரியின் கல்விச் சிறப்பு, தொழில்முனைவு வளர்ச்சி மற்றும் சமூக சேவை ஆகியவற்றின் மீதான உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.