• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கரிஷ்மா எனும் மாபெரும் கலைநிகழ்ச்சி விழா

March 13, 2023 தண்டோரா குழு

கோவை ஜி.ஆர்.ஜி வைரவிழாவினையொட்டி பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் கரிஷ்மா எனும் மாபெரும் கலைநிகழ்ச்சி விழா நடைபெற்றது.

கோவை அவினாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் வைரவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்நிலையில்,சத்வபாவனா இயற்கையுடன் இணக்கம்” என்ற தலைப்பில், கல்லூரிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சிகள் போட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.மேடை மற்றும் மேடைக்கு வெளியே என பல்வேறு போட்டிகளுடன் நடைபெற்ற இதில், கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலை சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கல்லூரி செயலர் முனைவர் யசோதாதேவி தலைமையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மீனா அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு நிகழ்வாக, விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் சீசன் 8 இன் வெற்றியாளர் ஸ்ரீதர் சேனாவின் மெல்லிசை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.தொடர்ந்து “சத்வ பாவனா இயற்கையோடு இணக்கம்” எனும் கருப்பொருளின் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் மாணவர்களின் திறனை வெளிக்கொணறும் வகையில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

கரிஷ்மா நிகழ்வாக நடைபெற்ற இதில், ஓவியம் (Object Painting), பட கவிதை (Picture Poetry), புகைப்படம் எடுத்தல் (Photography), விளம்பரப் படப்பிடிப்பு (Ad-Shoot), வினாடி வினா (Quiz), தடயங்களை ஆராய்தல் (Mock CID), மற்றும் குழு நடனம் (Group Dance), இசைக்குழுக்களின் போர் (Battle of Bands),என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.இதில் குழு பாட்டு போட்டியில் பிஷப் அப்பாசாமி கல்லூரி முதலிடம் பெற்றது.இதே போல ஒட்டு மொத்த கரிஷ்மாவில் சிறந்த பரிசை எஸ்.என்.ஆர். கல்லூரியைச் சார்ந்த மாணவர்கள் “கரிஷ்மா” என்ற பட்டத்தை கம்பீரத்துடன் பெற்றுக்கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, கிருஷ்ணம்மாள் கல்லூரியின் முன்னால் மாணவியும், விஜய் தொலைகாட்சி சின்னத்திரை நடிகையுமான ஷில்பா நாயர் பரிசுகள் வழங்கி கெளரவித்தார்.இறுதியாக, கல்லூரியின் மாணவர் தலைவர் பிரீத்திகுமாரி அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.

மேலும் படிக்க