• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கு காப்புரிமை வழங்கப்பட்டது

February 4, 2022 தண்டோரா குழு

கோயம்புத்தூரில் உள்ள பூசாகோ ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரிக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

“உணவுப் பொருட்களை பேக்கிங் செய்வதற்கான பாலிமர் கலவை மற்றும் அவற்றின் செயல்முறைக்கான பாலிமர் கலவை” என்ற தலைப்பில் இக்காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் சார்ந்த பாலிமர்கள், அதன் நெகிழ்வுத்தன்மை, ஆயுள் மற்றும் நீர் மற்றும் பிற இரசாயனங்களுக்கு குறைவான எதிர்வினை காரணமாக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆனால் அந்த வகை பாலிமர்கள் மக்கிப் போகாமல் அப்படியே இருப்பதால் இயற்கைக்குக் கேடு விளைவிப்பதாகவும் இருந்தது. இந்தக் குறைபாட்டைப் போக்கும் விதமாகவும், பிளாஸ்டிக் மாசுக்களைத் தவிர்ப்பதற்காகவும் பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் இயற்பியல்துறைப் பேராசிரியை டாக்டர் சி.ஷர்மிளா மற்றும் பி.எஸ்.ஜி. ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் ஆராய்ச்சித்துறை டீன் டாக்டர் ரமேஷ் சுப்ரமணியன், ஆராய்ச்சி அறிஞர் திலகவதி ஆகியோர் மக்கும் தன்மையுடைய பாலிமரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த பாலிமர் தாள், இயற்கை மூலப்பொருள்களிலிருந்து உருவாக்கப்படுகிறது. இயற்கை மூலத்திலிருந்து பெறப்படும் மக்கும் பாலிமர், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத எளிமையான சேர்மங்களாக எளிதில் சிதைந்துவிடும் தன்மை கொண்டது. தற்போதைய காப்புரிமையானது செலவு குறைந்த மற்றும் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப பாலிமர் தாளின் கண்டுபிடிப்பைக் கையாள்கிறது. மேம்படுத்தப்பட்ட பாலிமர் தாள் சோதனைக்காக NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தால் சான்றளிக்கப்பட்டது.

இந்த பாலிமர் தாள் எளிதில் மக்கிப்போகும் தன்மை, வலிமை மற்றும் உணவு தரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.செயற்கை பாலிமருடன் ஒப்பிடும் பொழுது புதிதாக
கண்டுபிடிக்கப்பட்டுள்ள பயோபாலிமரை உணவுப் பொருட்களை பேக்கிங் செய்யப் பயன்படுத்தலாம்.காப்புரிமை சட்டம்,1970 இன் கீழ் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.மேலும் இக்காப்புரிமை 20 ஆண்டுகள் வரை செல்லுபடியாகத் தக்கதாகும்.

பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி நிர்வாகத்தினர், செயலர், முதல்வர் கண்டுப்பிடிப்பாளர்களான டாக்டர் சி.ஷர்மிளா மற்றும் குழு உறுப்பினர்கள் பணிகளைப் பாராட்டி இத்துறையில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிட ஊக்கமளித்தனர்.

மேலும் படிக்க