• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜியில் காதம்பரி இசை விழா நிறைவு : இளம் பாடகிக்கு யுவகலாரத்னா விருது

January 5, 2025 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி அறக்கட்டளை சார்பில்
பி.எஸ்.ஜி காதம்பரி 2025 எனும் தலைப்பில் இசைவிழா ஜன.2ம் தேதி முதல் 5ம் தேதி வரை கோவை பீளமேட்டில் உள்ள பி. எஸ்.ஜி மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் 4 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது.

பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் நடத்தும் ‘ஸ்வர்ண சங்கீத்’ எனும் தலைப்பில் கர்நாடக இசை பாடல் கச்சேரி நடைபெற்றது.தொடர்ந்து இந்த காதம்பரி நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வான, இசை மற்றும் நாட்டியத்துறையில் சிறப்பாக பங்களித்து வரும் இளம் சாதனையாளர்களுக்கு பி.எஸ்.ஜி அறநிலையத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

2024-25ம் ஆண்டிற்கான “யுவகலாரத்னா” விருது” குமாரி ஸ்பூர்த்தி ராவ்” அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரபல கர்நாடக இசை மேதை கலைமாமணி ஸ்ரீ.மதுரை ஜி.எஸ். மணி கலந்துகொண்டு இந்த யுவகலாரத்னா விருதினை வழங்கி கவுரவித்தார்.

கலைகளை பாதுகாப்பதிலும், இளம்தலைமுறையினரிடையே பாரம்பரிய இசை மற்றும் கலைகளை கொண்டுசேர்ப்பதிலும்,இந்த துறையை மேம்படுத்துவதிலும் பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் அர்ப்பணிப்புக்கு சான்றாக இந்த காதம்பரி நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன், பி. எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி இசைத்துறை துறைத் தலைவர் விஜய ஜெயா, பி.எஸ்.ஜி ஐடெக் கல்லூரி செயலாளர் மோகன்ராம், பி. எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரி ஆங்கில பேராசிரியர் சுரேஷ், பேராசிரியர்கள்,பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், அலுவலர்கள், மாணவ,மாணவியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க