• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிஷப் அம்புரோஸ் தன்னாட்சி கல்லூரி அங்கீகாரம் மற்றும் கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளி CBSE அங்கீகாரத்திற்கான பாராட்டு விழா

June 28, 2024 தண்டோரா குழு

கோவை சுங்கம் பைபாஸ் அருகே உள்ள பிஷப் அம்புரோஸ் கல்லூரி 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.தற்பொழுது தரம் உயர்த்தப்பட்டு 2024ம் ஆண்டு முதல் தன்னாட்சிக் கல்லூரிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.அதேபோல் கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளி சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்றுள்ளதையும் கொண்டாடும் வகையில், இன்று மாலை பிஷப் அம்புரோஸ் கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கோவை மறை மாவட்ட ஆயரும் கல்லூரியின் தலைவருமான டாக்டர் தாமஸ் அக்குவினாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பள்ளி மற்றும் கல்லூரியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பிஷப் அம்புரோஸ் கல்லூரி அனைத்து ஏழை எளிய மக்களுக்கு கல்வியை வழங்குவதற்காகவும் மாணவர்களின் எதிர்காலத்தின் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களை கொண்டு வருவதற்காகவும் தன்னாட்சி கல்லூரியாக மாற்றுவதற்கு முயற்சி செய்தோம். தற்போது தன்னாட்சி கல்லூரிக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதேபோல், கார்மல் கார்டன் பப்ளிக் பள்ளி பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கொண்டு வரும் முயற்சியில் தற்போது சிபிஎஸ்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கத்தோலிக்க மறை மாவட்டத்தின் லட்சியம் தொண்டு செய்வது ஆகும்.அதில் கல்வி தொண்டு முக்கிய குறிக்கோளாக கொண்டுள்ளோம். குறிப்பாக, கல்வியை வியாபாரமாக இல்லாமல், அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் மாணவர் சேர்க்கைக்கு
குறைந்த கட்டணத்தை வழங்கி வருகின்றோம்.இதில் அனைத்து ஏழை எளிய மக்களும் பயன்பெற்று எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு, கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்டேனீஸ் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். கல்லூரியின் செயலர் அருட்தந்தை டாக்டர் ஆர்.டி.இ ஜெரோம் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் அ. பீட்டர் ராஜ், பள்ளி முதல்வர் உஷா ராணி, ரோமன் கத்தோலிக்க பள்ளியின் பொறுப்பாளர் ஆரோக்கிய ததேசு மற்றும் கோவை மறை மாவட்ட பொருளாளர் ஆன்டனி செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

இவ்விழாவில் ஆர் சி குழு உறுப்பினர்கள், பாதிரியார்கள், கன்னிகஸ்திரிகள், பள்ளி, கல்லூரி துணை முதல்வர், டீன் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் படிக்க