• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு திட்டம்

December 10, 2016 தண்டோரா குழு

புதிய ரூபாய் நோட்டுகளை பிளாஸ்டிக்கில் அச்சிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது என மத்திய இணை நிதியமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 9) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அப்போது, “புதிய ரூபாய் நோட்டுகள் பிளாஸ்டிக்கில் அச்சிடப்படுமா?” என்ற எழுத்துபூர்வமான கேள்விக்குப் பதலளித்த அமைச்சர் மேக்வால், “பிளாஸ்டிக் அல்லது பாலிமர் மூலக் கூறுகளைக் கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த மேக்வால், “கடந்த ஆண்டு 1,௦௦௦ ரூபாய் நோட்டுகள் அச்சிட்டதில் பாதுகாப்புக் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது. ஹோஷங்காபாதில் உள்ள செக்யூரிட்டி பேப்பர் மில்லில் இருந்து வரும் காகிதங்கள் நாசிக்கில் உள்ள கரென்சி அச்சிடும் இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. அவ்வாறு 2௦15ல் அச்சிட்டபட்ட 1,௦௦௦ ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு நூல் இல்லை என்று இந்திய ரிசேர்வ் வங்கிக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மின்டிங் கார்பொரேசன் (SPMCIL) விசாரணை செய்து வருகிறது.

மேலும், இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், தரமான உற்பத்தி குறித்த நடவடிக்கை மற்றும் ஆன்லைன் ஆய்வு அமைப்பை வலுப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது போன்ற தவறுகள் நேராமல் இருக்க ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது” என்றார்.

பல சோதனைகளுக்கு பிறகு, புதிய ரூபாய் நோட்டுகளை பிளாஸ்டிக்கில் அச்சிட இந்திய ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ரூ. 10த்துக்கான பத்து லட்சம் நோட்டுகள் அச்சடித்து, நாட்டின் கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், சிம்லா, புவனேஸ்வர் ஆகிய ஐந்து நகரங்களில் சோதனை முயற்சியாகப் புழக்கத்துக்கு விடப்படும்.

பிளாஸ்டிக் நோட்டுக்களின் ஆயுள் காலம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே அதைக் கொண்டு போலி ரூபாய் நோட்டுகளைத் தயாரிக்க முடியாது. போலியாக பயன்படுத்த முடியாது. காகித நோட்டுகளை விட அவை சுத்தமானவை. கள்ள நோட்டுகளில் இருந்து தப்பிக்க பிளாஸ்டிக் நோட்டுகளை ஆஸ்திரேலியா அரசு முதல் முதலாக அறிமுகம் செய்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க