June 8, 2018
தண்டோரா குழு
தண்ணீர் பாட்டில்களைக் குடித்துவிட்டு சரியான இடத்தில் போட்டால் 5 ரூபாய் பரிசளிக்கும் திட்டத்தை ரயில்வே துறை அமல்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் பிளாஸ்டிக் பாட்டில் சேகரிப்பு இயந்திரம் ஒன்றை வைத்துள்ளது.இதில் குடித்துவிட்டு காலி தண்ணீர் குளிர்பானம் பாட்டில்கள் போன்றவற்றை போட்டால் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 5 ரூபாய் பரிசு கிடைக்கும்.
பேடிஎம் மொபைல் வாலெட் அப்ளிகேஷன் மூலம் இந்த பரிசு பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே ஒரு பாட்டிலை இந்த இயந்திரத்தில்போட்ட பின் அந்த இயந்திரத்தில் பேடிஎம் மொபைல் எண்ணை அளிக்க வேண்டும்.
அந்த எண்ணுக்கு 5 ரூபாய் கேஷ்பேக் தொகையாக கிடைத்துவிடும்.இந்த திட்டத்துக்கு ரயில் பயணிகளிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.பிளாஸ்டிக் குப்பைகளைக் குறைக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தியுள்ளது.