• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிளாஸ்டிக் கழிவு பொருட்களை வைத்து ஆடைகள் தயாரிப்பு – அசத்தும் கோவை நிறுவனம்

February 15, 2022 தண்டோரா குழு

பிளாஸ்டிக் கழிவு பொருட்களை வைத்து,ஆடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயார் செய்து சர்க்கிள் எக்ஸ் நிறுவனம் அசத்தி வருகிறது.

கோவை, ஈச்சனாரி பகுதியில் உள்ள இரத்தினம் கல்வி குழுமங்களின் ஒன்றான ஏஸ் ரைஸ்,புதிய,திட்டங்களை முன்னேடுத்து நடத்துவதில் பல்வேறு, சாதனைகளை படைத்துள்ளது.மேலும் இயற்கை வளங்களை பாதுகாக்க பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கழிவுகளை மறு சுழற்சி செய்து, அதனை அதனை மீண்டும் பயண்படுத்துவதற்காக,கோவையை சார்ந்த 700 க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களுடன், இணைத்து மாதம் 500 மெட்ரிக் டன் கழிவுகளை, மறுசுழற்சிக்கு வழிவகை செய்யப்படுவதாக ஏஸ் ரைஸ் ஒருங்கிணைப்பார்கள் தெரவித்தனர்.

இது குறித்து சர்க்கிள் எக்ஸ் அமைப்பின் நிறுவனர் விஷ்ணு வரதன்,அட்டல் இங்க்பெஷன் சென்டர்,ரைஸ் இயக்குநர்,நாகராஜன் தெரிவித்தபோது,

கோவையை சார்ந்த சர்க்கிள் எக்ஸ் எனும் நிறுவனம், இபிஆர் மூலமாக 20க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுடனும், 50க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்களுடனும் நேரடியாக இணைந்து இந்த பணியை மேற்கொள்வதாகவும், தினந்தோறும் பயண்படுத்தபடும் வாட்டர் பாட்டில், சிப்ஸ் கவர்களை உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு உடை,மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயார்படுத்தி விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க