March 2, 2020
கோவையில் 34900 பேர் இன்று பிளஸ் 2 பொதுதேர்வு எழுதுகின்றனர்.
கோவை மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை, 356 பள்ளிகளை சேர்ந்த, 34 ஆயிரத்து 286 பேர் எழுதுகின்றனர்.மொழிப்பாடத்துடன் துவங்கும் இத்தேர்வு,3 மணி நேரம் நடக்கிறது. மாணவர்கள் காலை, 10 மணிக்குள் தேர்வு அறையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
10 நிமிடங்கள் வினாத்தாள் வாசிக்கவும், ஐந்து நிமிடங்கள் மாணவர்களின் தகவல் சரிபார்த்து, கையெழுத்திடும் நடைமுறைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.காலை 6 மணிக்கு, 13 ஒருங்கிணைப்பு மையங்களில் இருந்து, வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பறக்கும் படை பணிகளில் மட்டும், 300 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்எந்த புகாருக்கும் இடமளிக்காத வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளி மாணவர்கள், ஷூ மற்றும் அடையாள அட்டைஅணிந்து வரக்கூடாது என, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.இதோடு,தேர்வுக்கு தேவையான பென்சில், பேனா உள்ளிட்டவற்றோடு, அனுமதி சீட்டு கட்டாயம் எடுத்துவர வேண்டும். டிஜிட்டல் வாட்ச் அணிந்து வரக்கூடாது. அரைமணி நேரத்துக்கு ஒருமுறை, அலாரம் மணி ஒலிக்கப்படும்’ என்று தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.