• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம்-3 கட்டாஞ்சி மலையில் 830 மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறைவு

April 12, 2022 தண்டோரா குழு

பில்லூர் கூட்டு குடிநீர் திட்டம்-3, ரூ.779 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மேட்டுப்பாளையம், நெல்லிதுறை ஊராட்சி, மருதூர் ஊராட்சி, தண்டிபெருமாள் புரம் ஆகிய இடங்களில் நீரேற்றும் நிலையம் உள்பட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை கோவை மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களிடம் மாநகராட்சி கமிஷனர் கூறியதாவது:

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சிக்கு கூடுதலாக 178 எம்எல்டி குடிநீர் கிடைக்கும். மேட்டுப்பாளையம், நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை ஆகிய இடங்களில் ரூ.134 கோடியில் தலைமை நீரேற்று நிலையம் கட்டும் பணி 30 சதவீதம் முடிந்துள்ளது. பின்னர் முருகையன் பரிசல் துறையில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருதூர் பகுதிக்கு குடிநீர் பம்ப் செய்து கொண்டு வரப்படுகிறது.

மருதூர் ஊராட்சி தண்டிப்பெருமாள்புரம் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி 50 சதவீதம் முடிந்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகளை 100 சதவீதம் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தண்டிப்பெருமாள்புரம் பகுதியில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கட்டாஞ்சி மலைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதற்காக இந்த மலையில் 900 மீட்டர் தொலைவிற்கு சுரங்கம் அமைக்கப்படுகிறது.

இதில் தற்போது வரை 830 மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறைவு பெற்று உள்ளது. மீதம் உள்ள 70 மீட்டர் தூரத்திற்கு சுரங்கம் அமைக்கும் பணி 20 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். பின்னர் இங்கிருந்து குடிநீர் நீர்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்லமுத்து, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் சாம்ராஜ், சிவஜோதி, நித்திலா, பாலச்சந்தர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க