• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிறந்து 90 நாட்களே ஆன குழந்தைக்கு கோவையில் இரட்டை சுவிட்ச் அறுவை சிகிச்சை

November 23, 2022 தண்டோரா குழு

பிறந்து 90 நாட்களே ஆன இலங்கையைச் சேர்ந்த குழந்தைக்கு கோவை ஜி. கே. என். எம். மருத்துவமனையில், இரட்டை சுவிட்ச் அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

பேபி என்ற இலங்கையைச் சேர்ந்த மூன்று மாத ஆண் குழந்தை, பிறந்த உடனேயே, குழந்தை சுவாசிப்பதில் சிரமம், உணவு உட்கொள்ளுதலில் பிரச்சினை,அதிக வியர்வை,எடை அதிகரிப்பதில் தாமதம் மற்றும் நீல நிறமாற்றம் ஆகிய தொந்தரவுகள் இருந்து வந்துள்ளன. இதை தொடர்ந்து, இலங்கையில், செய்யப்பட்ட பரிசோதனைகளில் குழந்தைக்கு, பிறப்பு தொடர்பான முக்கிய இதயப் பிரச்சினைகளில் ஒன்று கண்டறியப்பட்டது.

மேலும் இந்தியாவில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் உள்ள பல்வேறு மருத்துவர்கள் பலரும் அதிக ஆபத்தை கருத்தில் கொண்டு அறுவை சிகிச்சைக்கு மறுப்பு தெரிவித்தனர்.இறுதியாக, குழந்தையின் பெற்றோர், தமிழ்நாடு, கோயம்புத்தூரில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனையை அணுகினர். இதை தொடர்ந்து குழந்தையை மிகவும் சிக்கலான இரட்டை சுவிட்ச் அறுவை சிகிச்சை மற்றும் VSD மூடுதலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சுமார் 12 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.

குழந்தையின் மார்பு 48 மணிநேரம் திறந்து வைக்கப்பட்டு, மார்பு மூடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு குழந்தை விரைவில் குணமடைந்து 14 வது நாளில் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. ஜி.கே.என்.எம் மருத்துவர்கள் இப்பணி மருத்துவத்துறையினரின் பாராட்டை பெற்றுள்ளது.

மேலும் படிக்க