• Download mobile app
18 Nov 2025, TuesdayEdition - 3569
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் 11 வது மேல்நிலை மாணவர்களின் விளையாட்டு விழா

September 27, 2025 தண்டோரா குழு

கோவை குரும்பம்பாளையம் பிரிவு மதுக்கரையில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

அந்த வகையில் இன்று பதினோராம் ஆண்டு மேல்நிலை மாணவர்களின் விளையாட்டு விழா பள்ளியின் நிறுவனர் T. கனகாச்சலம், பிருந்தாவன் கல்வி நிறுவனங்களின் தாளாளர் வசந்தராஜன் மற்றும் R.திருமூர்த்தி
தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வி கல்வி இயக்குநர் டாக்டர்.எம்.ராம்குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

விழாவில் பள்ளியின் முதல்வர் தவனிதா திருமூர்த்தி அனைவரையும் வரவேற்று சிறப்புரை ஆற்றினார்.விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு,தொடர் பயிற்சி,மல்லர் கம்பம், கராத்தே, யோகா,சிலம்பம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினர் டாக்டர்.எம்.ராம்குமார் பேசுகையில்,

வெற்றி என்பது எல்லோருக்கும் கிடைப்பதில்லை.ஆனால் அந்த வெற்றியை பெறக்கூடிய தகுதி எல்லோருக்கும் உண்டு என்று மாணவர்களிடத்தில் விளையாட்டுக்கலையை வளர்க்கும். பொதுவாக விளையாண்டால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் என பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் விளையாண்டால் அவர்களின் மூளை இன்னும் சுறுசுறுப்பாக செயல்படும். இதனால் அவர்களது படிப்பு இன்னும் அதிகமாகும் என்றார்.

பள்ளியின் முதல்வர் வனிதா திருமூர்த்தி கூறுகையில்,

இப்பள்ளியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் விளையாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்த வருடத்தில் மட்டும் ஐந்து மாணவர்கள் தேசிய அளவில் சாதனை புரிந்துள்ளனர். விளையாட்டு துறையில் மாணவர்கள் பங்கேற்கும்போது அவர்களின் கல்வி தரம் உயர்வது போது அவர்களது ஒழுக்கமும் உயரும் என்றார்.

மேலும் படிக்க