• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரிட்டனின் நிதி அமைச்சகத்தில் தலைமை பொருளாதார வல்லுனராக பெண் நியமனம்

February 1, 2018

பிரிட்டனின் நிதி அமைச்சகம், முதன்முறையாக அதன் தலைமை பொருளாதார வல்லுனராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிரிட்டின் நாட்டின் பொருளாதார கொள்கை பணிகளில் பணிபுரிய பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நாட்டின் நிதி அமைச்சகம் எண்ணியது. இதையடுத்து, அதன் பொருளாதார வல்லுனராக கிளேர் லோம்பார்டெல் என்னும் பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.அவர் வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி முதல் தனது பணியை தொடங்கவுள்ளார்.

கிளேர் லோம்பார்டெல் பிரிட்டன் நாட்டின், முன்னாள் பிரதமராக இருந்த டேவிட் கேமரூனுக்கு பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார்.மேலும், அப்பொழுது நிதி அமைச்சராக இருந்த ஜோர்ஜ் ஆஸ்போர்னின் தனிப்பட்ட செயலாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க