• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரான்ஸ் நாட்டின் அணு ஆலையில் விபத்து 5 பேருக்கு லேசான காயம்

February 9, 2017 தண்டோரா குழு

பிரான்ஸ் நாட்டின் அணு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது.வட பிரான்ஸ் நாட்டில் உள்ள ப்ளம்வில் நகரில் உள்ள ப்ளம்வில் அணு ஆலையின் ஒரு பகுதியில் வியாழக்கிழமை (பிப்ரவரி 9) திடீரென வெடி விபத்து ஏற்பட்டதது. இதில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த ஆலை இங்கிலாந்து நிலப்பகுதியில் இருந்து 1௦5 கிலோமீட்டர் தூரத்திலும் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை சேர்க்கும் கால்வாயில் உள்ள குர்ன்சே மற்றும் ஜெர்சி இடையே 40-50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.ஒரு அணு உலை கழன்று விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது. இச்சம்பத்தில் அணு ஆபத்து எதுவும் இல்லை.

இது குறித்து அந்நிறுவனத்தின் உள்ளூர் அதிகாரி கூறுகையில்,

“இது ஒரு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப நிகழ்வு ஆகும். ஆனால், அது ஒரு அணு விபத்து இல்லை. இச்சம்பவம் அணு மண்டலத்துக்கு வெளியே நடந்தது” என்றார்.

பிரான்ஸ் நாட்டின் செய்தித்தாள் அவுஸ் பிரான்ஸ் வெளியிட்ட செய்தியில், “அணு ஆலையில் உள்ள இயந்திர அறையில் வியாழக்கிழமை காலை 1௦ மணியளவில் வெடிச் சத்தம் கேட்கப்பட்டது. உடனே, தீயணைப்பு வீரர்களும் அவசர சேவை பிரிவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்” என்று கூறியது.

மேலும் படிக்க