• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரம்மாண்ட சாக்லெட் கண்காட்சியுடன் சுதந்திர தினம் கொண்டாட்டம்

August 18, 2020 தண்டோரா குழு

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 74 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய தலைவர்களை நினைவுகூறும் வகையில் நடந்த இவ்விழாவிற்கு தலைமையேற்ற கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி . எல் , சிவக்குமார் தேசியக் கொடியை ஏற்றிவைத்து விழாப் பேருரையாற்றினார். அவர் தனது உரையில் தேசத்தின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை வலியுறுத்தியதோடு மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியினை பின்பற்றவேண்டும் என்றும் அறிவுறுத்திப் பேசினார் .

விழாவின் சிறப்பு விருந்தினாராக கல்லூரியின் முன்னாள் மாணவரும் தற்போதைய தொழில் முனைவோராகவும் இருக்கும் கே.அஜித் குமார் கலந்து கொண்டார்.விழாவில் துணை முதல்வர் முனைவர் எஸ்.தீனா,முதன்மையர்கள் , துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.கல்லூரியின் என் . எஸ்.எஸ் மற்றும் என்.சி.சி. அணிகள் இந்நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

விழாவின் தொடர்ச்சியாக இக்கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறையின் சார்பாக சிறப்பு பிரம்மாண்ட சாக்லெட் கண்காட்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் நம் நாட்டின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு , 74 சுவையிலான பல்வேறு வகையிலான சாக்லெட்கள் தயாரிக்கப்பட்டு கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.சுமார் 50 கிலோ எடை மதிப்பில்,பலதரப்பட்ட சுவை மற்றும் நிறங்களிலும் இருந்த சாக்லெட் கண்காட்சி அனைவரும் பிரம்மிக்கும் வகையில் அமைந்திருந்தது.

குறிப்பாக கண்காட்சியில் நம் இந்திய பாரம்பரிய சுவைகளான துளசி , மலை நெல்லி , வேம்பு , இஞ்சி , கற்கண்டு போன்ற கிராமிய மூலிகை வகை சாக்லெட்டுகளும் , ராகி , கம்பு , சோளம் , நிலக்கடலை , ஏலக்காய் போன்ற தானிய வகை சாக்லெட்டுகளும் , முக்கனிகளான மா , பலா , வாழை ஆகிய பழங்களின் சுவையிலான சாக்லெட்டுகளும் , பேரிச்சம்பழம் , முந்திரி , திராட்சை , அத்தி உள்ளிட்ட உலர் உணவு சுவைகள் கொண்ட சாக்லெட்டுகளும் , வெள்ளரி , ஆளி சூரியகாந்தி விதைகளின் சுவையிலான சாக்லெட்டுகளும் பெரும்பாலும் இடம்பெற்றதோடு அவைகள் நாட்டுப்பற்றுணர்வை வெளிப்படுத்தும் வகையிலும் அனைவரும் பாராட்டும் வகையிலும் அமைந்திருந்தது .

இது தவிர பட்டர்ஸ்காட்ச் , வெண்ணிலா , புளூபெர்ரி , கேரமல் , பேஷன் பழம் , பாதாமி , வால்நட் போன்ற மிக பிரசித்திபெற்ற சுவைகளிலும் சாக்லெட்டுகள் இக்கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன . கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறையும் , துறையின் முன்னாள் மாணவரும் , ஜாம்மிஸ் கஃபே நிறுவனத்தின் நிறுவனர் செஃப் கே . அஜித் குமார் அவர்களும் இணைந்து இந்த பிரம்மாண்ட சாதனையை செய்து முடித்து கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர் .

மேலும் படிக்க