• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரமல் ரீடெய்ல் பைனான்ஸ் நிறுவனம் யூஸ்டு கார் நிதிப் பிரிவு சேவை துவக்கம்

April 16, 2021

பிரமல் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமான பிரமல் கேபிடல் அண்ட் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்டின் கீழ் செயல்படும் வணிக நிறுவனமான பிரமல் ரீடெய்ல் பைனான்ஸ் தனது பல்வேறு தயாரிப்புகளுக்கான சில்லறை நிதி வணிகத் தளத்தை விரிவாக்கம் செய்திருப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிறு மற்றும் நடுத்தர நகரங்களைக் உள்ளடக்கிய பாரத சந்தையின் பல்வேறுபட்ட நிதித் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், இந்தியா முழுவதுமுள்ள சிறு மற்றும் நடுத்தர நகரங்களைக் குறிவைத்து புதிய, விரிவாக்கப்பட்ட திட்டங்களை அளிக்கிறது இந்நிறுவனம். கடந்த காலாண்டில், டிஜிட்டல் கொள்முதல் நிதி மற்றும் பயன்படுத்தப்பட்ட கார் நிதித் தீர்வுகளை அறிமுகப்படுத்தியது.

இந்த விரிவாக்கத்தை மேலும் வலுவாக்கும் விதமாக, இத்தளத்தில் வாடிக்கையாளர் தேவைகளுக்காகச் சேவையாற்றும் தொழில்நுட்ப சூழலமைப்பிலுள்ள பல்வேறு பங்கேற்பாளர்களுடன் கூட்டுச் செயல்பாட்டில் இறங்கியுள்ளது பிரமல். 2021-ம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில், கொள்முதல் நிதியைப் பொறுத்தவரை ஸெஸ்ட்மனி நிறுவனத்துடனும், பயன்படுத்தப்பட்ட கார் நிதிப்பிரிவில் கார்ஸ்24 உடனும் கூட்டுச் செயல்பாட்டை மேற்கொண்டுள்ளது.டிஜிட்டலின் முழுவீச்சு செயல்முறையில், வாடிக்கையாளர் தொழில்நுட்ப நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு நிதித்தீர்வுகளை வழங்குவதற்கான ஒரு விரைவான, எளிய வழியை அளிக்கிறது பிரமல் தளம்.

சமீபத்திய திட்ட அறிமுகங்களுடன் மலிவான வீட்டுக் கடன்கள், பெரும் மக்களுக்கான வளமான வீட்டுக் கடன்கள், சொத்துகளுக்கு எதிரான கடன்கள், பாதுகாப்பான சிறு வர்த்தகக் கடன்கள், கொள்முதல் நிதி, பாதுகாப்பாற்ற கடன்கள், பயன்படுத்தப்பட்ட கார் கடன்கள் ஆகிய 7 திட்டங்களைச் சந்தையைக் குறிவைத்து அறிமுகப்படுத்துகிறது பிரமல் ரீடெய்ல்.

நாட்டிலுள்ள 40 பகுதிகளை தற்போது அடைந்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில், இன்னும் 10 இடங்களில் புவியியல் ரீதியிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடரவுள்ளது. கோவிட் நோய்த்தொற்றின் இடையே, ரீடெய்ல் பைனான்ஸின் பணியாளர் எண்ணிக்கை 1,000 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

இது பற்றி பிரமல் ரீடெய்ல் பைனான்ஸின் தலைமை நிர்வாக அலுவலர் ஜெய்ராம் ஸ்ரீதரன் கூறுகையில், பாரத தேசத்தின் பட்ஜெட் வாடிக்கையாளர்கள்தான் எங்களது சந்தை இலக்கின் அடிப்படையாக விளங்குகின்றனர். இந்த வாடிக்கையாளருக்கு, வீட்டுக் கடன் ஒரு மிக முக்கியமான நிதித் தேவையாக இருக்கிறது. இருப்பினும், தங்களது வணிகத்தை விரிவாக்குவது, பழைய கார் வாங்குவது உட்பட பல்வேறுபட்ட இதர தேவைகளையும் கொண்டிருக்கின்றனர். பெருமளவு வசதிகள் வழங்கப்படாத இப்பிரிவுகளில் கடன் கிடைப்பது குறிப்பிட்ட அளவில் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த பல்வேறுபட்ட தேவைகளைத் தீர்ப்பதையும், பாரதத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதையும் நோக்கமாகக் கொண்டு பிரமல் ரீடெய்ல் பைனான்ஸின் பல்வேறு திட்டங்களுக்கான தளம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

எங்களது தொழில்நுட்ப தளத்தைக் கட்டமைப்பது, பணியாளர்கள் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது, எங்களது கிளைகளின் எண்ணிக்கையை மும்மடங்காக ஆக்குவது, திட்டங்களின் எண்ணிக்கையை மும்மடங்காக்குவது என்று 2021 நிதியாண்டு வெற்றிகரமானதாக அமைந்துள்ளது. எந்தவொரு வெற்றிகரமான கையகப்படுத்தலுக்குப் பின்னால் இருக்கும் செயல் ஒருங்கிணைப்பு உட்பட, வரும் ஆண்டில் எங்களது சில்லறை வர்த்தகத்தில் மேலும் முதலீடு செய்வதை எதிர்நோக்கியிருக்கிறோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் படிக்க