May 9, 2018
தண்டோரா குழு
தமிழறிஞரும்,பட்டிமன்ற நடுவரும்,ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவாளருமான டாக்டர் அறிவொளி(80)உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார்.
அறிவொளியின் சொந்த ஊர்,நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த சிக்கல் ஆகும்.1986ல் முதல்முறையாக வழக்காடு மன்றம் என்னும் அமைப்பை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய இவர் அண்ணாமலை பல்கலைக்கழகம்,பூம்புகார் கல்லூரியில் பேராசியராக பணியாற்றினார்.உலக நாடுகளுக்கு மாற்று மருத்துவத்தை எடுத்துச் சென்ற இவர்,புற்றுநோய்க்கு தமிழ் மருத்துவத்திலும் தீர்வு கூறியதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
தனது வாழ்நாளில் 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவரின் திறமையை பாராட்டி ஆய்வுரை திலகர் பட்டம், கபிலவாணர்,உள்ளிட்ட பல்வேறு விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் திருச்சி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, அறிவொளி நேற்றிரவு காலமானார்.