June 10, 2019
தண்டோரா குழு
ஞானபீட விருது வாங்கிய பிரபல நடிகரான கிரஷ் கர்னாட் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
காதலன், ஹேராம், செல்லமே, ரட்சகன், மின்சாரக் கனவு உள்ளிட்ட தமிழ்ப்படங்களில் நடித்தவர் கிரிஷ் கர்னாட்.பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள கிரிஷ் கர்னாட், மேடை நாடகங்களிலும் தனக்கென தனிப் பெயரைப் பெற்றவர் ஆவார். நடிகர், நாடககாரர், கன்னட இலக்கியவாதி பன்முக தன்மைகொண்ட இவர் நாட்டின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ , பத்ம பூஷன், சாகித்ய அகாடமி என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், பெங்களூருவில் வசித்து வந்த கிரிஷ் கர்னாட் இன்று தனது வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 81. இதையடுத்து, அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காதலன், காதல் மன்னன், ரட்சகன் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட் ஞானபீட விருது வாங்கிய பழம்பெரும் நடிகரான கிரஷ் கர்னாட் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார்