April 17, 2018
தண்டோரா குழு
பிரபல டிவிட்டர் சமூக வலைதளம் தொழில்நுட்பக் கோளாறால் 10 நிமிடங்களாக முடங்கியது.
சமூக வலைத்தளங்களில் உலக அளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் டுவிட்டர் சமூக வலைத்தளம்.உலகின் முக்கிய பிரபலங்கள்,திரைத்துறையினர்,என பலரும் டுவிட்டர் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
பெரும்பாலும் தற்போது புகைப்படங்கள்,வீடியோக்கள்,குறுஞ்செய்திகள் அனைத்தும் டுவிட்டரில் தான் பதிவு செய்யபட்டு வருகிறது.இந்நிலையில்,தொழில்நுட்ப கோளாறு காரணமாக சற்று நேரம் டுவிட்டர் சமூக வலைத்தளம் செயல் இழந்தது.இதனால் வலைதளவாசிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். எனினும் சிறது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது.