February 24, 2018
தண்டோரா குழு
மானிய விலை ஸ்கூட்டர் வழங்கும் விழாவில் பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மகளிருக்கான மானிய ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்துள்ளார். இத்திட்டத்தை துவங்கி வைப்பதற்கான நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்நிலையில், விழாவில் பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நீண்ட வாக்குவாதத்துக்கு பிறகு அவருடன் வந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு விழாவில் பங்கேற்க தமிழிசைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
பிரதமர், முதல்வர் உள்ளிட்டோர் வந்தபின் தாமதமாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழிசைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.