February 17, 2018
தண்டோரா குழு
பிரதமர் மோடி கூறியதால் தான், அதிமுகவின் இரு அணிகளை இணைக்க ஒப்புக்கொண்டதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் “பிரதமர் மோடி அறிவுறுத்தியதாலேயே அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன். தர்மயுத்தம் தொடங்கும்போது கூறியது ஒரு சதவிகித தகவல், கோபம் வரும்போதெல்லாம் மீதமுள்ள 99 சதவிகித தகவல்களும் வெளிவரும். சசிகலா குடும்பத்தினர் கடும் நெருக்கடிகளை அளித்தனர்.தன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்” என கூறியுள்ளார்.
மேலும்,தர்மயுத்தத்திற்குப் பிறகு, தற்போது சசிகலா மீதான கடும் விமர்சனத்தை ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.