• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் போட்ட திட்டம் அதிர்ச்சி அளிக்கிறது – தமிழிசை

June 8, 2018 தண்டோரா குழு

பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் போட்ட திட்டம் அதிர்ச்சி அளிக்கிறது. அரசியலில் எதிர்கட்சிகளை,எதிரி கட்சிகளாக பார்க்கக்கூடாது என கேட்டுக்கொண்டார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் நகரங்களில் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்சியாக நடப்பது அதிர்ச்சியளிக்கிறது.பிரதமர் மோடியின் மக்கள் மருந்தகம் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும் மருத்துவ செலவுகள் குறைந்துள்ளது என்றார்.

தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க வேண்டும் என சிலர் திட்டம் போட்டு கிராமங்களுக்கு சென்று ரகசியமாக ஆட்களை திரட்டி வருகிறார்கள்.ஜல்லிக்கட்டு,நீட் தேர்வு,தூத்துக்குடி ஸ்டெர்லைட் போன்ற போராட்டங்களை நடத்தி அமைதியை சீர்குலைக்க சதிதிட்டம் நடந்து வருவதாக குற்றம் சாட்டினார்.

நீட் தேர்வை பொறுத்தவரை அதிகம் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதாகவும்,மொத்தம் 4000 மருத்துவ சீட்டுகள் தான் உள்ளதாகவும்,இதில் சேர மாணவர்கள் எப்படி முன்னேறி வருகிறார்கள் என்பது தான் முக்கியம்.

பல ஏழை மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அவர்,அதனை முன்னிலைப்படுத்தாமல் தோல்விகளை மட்டுமே பெரிதுப்படுத்துவது வேதனை அளிக்கிறது.குறுவை சாகுபடிக்கு தமிழக அரசு உடந்தையாக தண்ணீர் திறக்க வேண்டும்.விவசாயத்தை மேம்படுத்தும் பணிகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசு தன் கடமையை செய்யும் எனவும்,சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் தமிழக அரசு தான் முன்னெடுக்க வேண்டும்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது.தொடர்ச்சியாக பெருநகரங்களில் சங்கிலி பறிப்பு தொடர்கதையாக உள்ளது.சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும்.

மேலும்,எஸ்.வி சேகரை இன்னமும் தமிழக காவல்துறையால் கைது செய்ய முடியவில்லையே என செய்தியாளர்கள் கேட்டதற்கு பெண்களை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கதாகவும்,எஸ்.வி சேகரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளோம் என்றார்”.

மேலும் படிக்க