• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

April 3, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை தமிழகஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று(ஏப் 3) சந்தித்து பேசியுள்ளார்.

காவிரி வேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக முழுவதும் மாணவர்கள், விவசாயிகள் பல்வேறு கட்சித் தலைவர்கள் கடந்த நான்கு நாட்களாக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆளும் அதிமுக கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து  (இன்று) தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தில் போராட்டம் வலுவடைந்த நிலையில் மத்திய அரசின் அவசர அழைப்பினை ஏற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று இரவு 7.30 மணிக்கு டெல்லிக்கு சென்றார்.இதனையடுத்து டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை  பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் ஆளுநர் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பின்போது சட்ட ஒழுங்கு குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க