• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரதமர், முதல்வரை விமர்சித்து பாடிய கோவன் கைது!

April 13, 2018

பிரதமர்,முதல்வரை விமர்சித்து பாடிய பிரச்சாரப் பாடகர் கோவன் எதிராக தொடர்ந்த வழக்கில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்,பாடகர்,சமூகச் செயற்பாட்டாளர் கோவன்.நாட்டுப் பாடல்கள் பாடுவதில் அதிக ஆர்வம் கொண்ட கோவன் அரசின் அடக்குமுறைகளை கண்டித்து வீதிகளில் இறங்கி மக்கள் மத்தியில் பாடல் வடிவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்துடன் இணைந்து இதனை கோவன் செய்து வருகிறார். இதற்கிடையில்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி மக்கள் அதிகாரம் சார்பாக கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

அப்போது கோவன் வன்முறையை தூண்டும் விதமாக பாடியதாகவும்,பிரதமர்,முதல்வரை விமர்சிக்கும் விதமாக பாடல் பாடியதாகவும் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் கோவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில்,பாடகர் கோவனனை கைது செய்ய மாற்று உடையில் டூரிஸ்ட் வாகனத்தில் சென்ற போலீசாரிடம் பொதுமக்கள் கைது செய்யக் கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.பின்னர் அப்பகுதிக்கு சென்ற போலீசார் கோவனை தடியால் அடித்து இழுத்து சிறிது நேரத்தில் செல்ல கூடிய கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு சுற்றி சென்றுள்ளனர்.மேலும்,கோவன் குழந்தைகள் மற்றும் மனைவியையும் போலீசார் காயப்படுத்தியுள்ளனர்.

முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஜெயலலிதா முதல்வராக இருந்த போது மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடியதற்காக கடந்த 2015ம் ஆண்டு கோவன் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க