• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரதமரின் மித்ரா பிரமாண்ட ஜவுளி பூங்கா திட்டம் உற்பத்தி கொள்ளவை ஊக்குவிக்கும் – சைமா வரவேற்பு

October 7, 2021 தண்டோரா குழு

ஜவுளி துறையில் உலக போட்டி திரனை அதிகரிக்க,அதிக உற்பத்திக் கொள்ளவை கொண்ட ஒருங்கிணைந்த மற்றும் பிரம்மாண்டமான ஜவுளி பூங்காக்களை தேவையான கட்டுமானம் மற்றும் இதர வசதிகளுடன் உருவாக்க ஒரு சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை ஜவுளித்துறையினர் மற்றும் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வேண்டுகோள் விடுத்து வந்தது.

இந்நிலையில் இந்திய வரலாற்றில் முதன்முறையாக பிரமாண்ட ஜவுளிப்பூங்காவின் மூலம், மிக அதிக உற்பத்திக் கொள்ளவை கொண்ட ஒருங்கிணைந்த ஜவுளி ஆலைகளை நிறுவ அதிகளவு ஊக்குவிப்புகளுடன் ஒரு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவி சாம் கூறியிருப்பதாவது:

இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.4445 கோடி நிதியை ஐந்தாண்டுகளுக்கு ஒதுக்கியமைக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய ஜவுளித்துறை மற்றும் வணிகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் மற்றும் மத்திய அமைச்சரவைக்கு நன்றி.

இத்தகைய நிதி ஏழு பூங்காக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பூங்கா முதலீட்டில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ஒரு புதிய பூங்காவிற்கு ரூ.500 கோடியும், பழைய பூங்கா விஸ்தரிப்பிற்கு ரூ.200 கோடியும் ஒதுக்கியுள்ளது. உலகத்தரமிக்க கட்டுமான வசதிகளையும்,இதர வசதிகளையும் ஏற்படுத்த இது உதவும். ஆண்டு விற்பனையில் மூன்று சதவீதம் வரை வழங்கப்படும் ஊக்கதொகை புதிய ஜவுளி ஆலைகளுக்கு உலக திரனை முதல் ஐந்தாண்டுகளில் பெற மிகவும் உதவும்.

ஜவுளி மூலப்பொருட்களை உலக விலையில் கிடைக்கப் பெற குவிப்பு வரிகளை பாலியஸ்டர், அக்ரிலிக் மற்றும் விஸ்கோஸ் பஞ்சிற்கு நீக்கியது போன்ற நடவடிக்கைகள் செயற்கை இழை வர்த்தகத்தில் இந்திய ஜவுளித் தொழிலுக்கு உலக போட்டி திரனை கணிசமாக உயர்த்தியுள்ளது. இத்தருணத்தில் அனைத்து திட்டங்களுக்கும் மெருகூட்டும் வகையில் மித்ரா எனும் பிரமாண்ட ஜவுளிப்பூங்கா திட்டம் அமைந்துள்ளது.

தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி, ஜவுளி பொருள் பரிசோதனை கூடங்கள், ஆராய்ச்சி கூடங்கள், புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு வேண்டிய வசதி, திறன்மேம்பாட்டு கட்டுமான வசதிகள், மருத்துவ வசதிகள், மின்சாரம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவைகள் ஒவ்வொரு பூங்காவையும் ஒரு நகராமாக உருவாக்கும். இதனால் பல லட்சக்கணக்கான வேலை கிடைப்பதோடு, பொது மக்களின் வாழ்க்கை திறன் வெகுவாக உயரும்.

மத்திய அரசு அறிவித்துள்ள ஏழு பூங்காக்களில் மாநிலத்திற்கு ஒரு பூங்கா வீதம் தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் மொத்தம் நான்கு பூங்காக்கள் தென் மாநிலங்களில் வரவிருப்பது சைமாவிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

இம்மாநில அரசுகளுக்கு சைமா பாராட்டை தெரிவித்துக்கொள்கிறது.
மத்திய அரசுடனும், நான்கு மாநில அரசுகளுடனும் சைமா ஒருங்கிணைந்து செயல்பட்டு நான்கு பூங்காக்களும் உலகில் தலைசிறந்த பூங்காக்களாக உருவாக முயற்சி எடுக்கும். இந்த பூங்காக்களில் முதலீடு செய்து பயன்பெற விரும்புவோர் உடனடியாக சைமாவை அணுக வேண்டுகோள் விடுக்கிறேன்.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள முதலீட்டாளர்கள் சைமாவை அணுகி இத்திட்டங்களில் உள்ள பலன்களை துரிதமாக பெற்றுக் கொண்டு முதலீடுகளை செய்ய சைமா சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க