• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரட்டன் மகாராணிக்கு சோஷியல் மீடியா அட்மின் தேவை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

May 20, 2019 தண்டோரா குழு

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் சமூகவலைத்தள பக்கங்களை நிர்வகிக்க அட்மின் தேவை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ளது. முக்கிய பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களின் மூலம் அன்றாடம் தங்களுடைய நடவடிக்கைகளை பதிவு செய்து வருகிறது. எனினும் சிலர் இதற்காக ஒரு அட்மினை வைத்துள்ளனர். அந்த வரிசையில் கடந்த மார்ச் மாதம் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு தொடங்கியுள்ளார்.

ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களை கையாள தெரிந்தாலே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியில் அமர்த்தப்படுபவருக்கு இந்திய மதிப்பில் ஆண்டுக்கு 26.5 லட்ச ரூபாய் சம்பளமும், ஆண்டுக்கு 33 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை அரண்மனையிலேயே இருந்து மகாராணி பதிவிட சொல்வதை பதிவிடுவது மட்டுமே வேலையாம். மதிய உணவு அரண்மனையிலேயே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவல்கள் பக்கிங்ஹாம் அரண்மனையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத் தற்போதைய சமூக வலைதளப் பயன்பாடு குறித்து அதிகப்படியான பரிச்சியம் இல்லாதவர் என்பதால் அவருக்கு உதவுவதற்காகவே இப்பணியிட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க