• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பியூஸ்மனுஷ் கைது சம்பவத்தில்அரசு மற்றும் காவல் துறை சட்டவிரோதமாக செயல்படுகின்றது – ஊர்வசி லுனியா

June 20, 2018 தண்டோரா குழு

பியூஸ்மனுஷ் கைது சம்பவத்தில் அரசு,காவல் துறை இரண்டுமே சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றது.உண்மையை அரசுக்கு எடுத்து உணர்த்தினால் கைது செய்வது என்பது சரியான நடவடிக்கை அல்ல என பியூஸ் மனுஸ் சகோதரி ஊர்வசி லுனியா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கோவை பிரஸ்கிளப்பில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஸ் சகோதரி ஊர்வசி லுனியா செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,

நேற்று முன்தினம் இரவு பியூஸ்மனுஷ் கைது செய்யப்பட்டது குறித்து குடும்பத்தினருக்கு காவல் துறையினர் முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.பியூஸ்மனுசை கடத்தி சென்றது போல அவரை அழைத்து சென்று கைது செய்துள்ளனர்.

மேலும்,கைது செய்யப்பட்ட பின்னர் வழகறிஞர்கள் அவரை சந்திக்கவும் காவல் துறை அனுமதிக்கவில்லை எனவும்,பியூஸ் மனுஷ் செல்போனை இதுவரை காவல் துறையினரே வைத்துள்ளனர் எனவும்,செல்போனை தங்களிடம் போலீசார் கொடுக்க மறுப்பதாகவும் தெரிவித்தார்.

சேலம்-சென்னை சாலை குறித்து தனது கருத்தை பியூஸ் சொல்கின்றார்.அவர் மக்களை தூண்டிவிட வில்லை எனவும் தண்ணீர், நிலம்,சுத்தமான காற்று மற்றும் விவசாயிகளுக்காக போராடினால்,குரல் கொடுத்தால் அவர்களை மாவோயிஸ்ட்,நக்சல் என தமிழக அரசு சொல்லுமா?எனவும் கேள்வி எழுப்பினார்.

8 வழிச்சாலை குறித்து முழுமையாக ஆய்வுகள் செய்யப்படவில்லை எனவும் இதை கேள்வி எழுப்பியதால் பியூஸ்மனுஷ் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.பியூஸ் மனுஷ் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன் வைத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் துறை முயல்கின்றது.அதிகாரத்தில் இருப்பவர்களை பாதுகாப்பது மட்டும் காவல்துறையின் பணியா எனவும்,மக்களுக்கு அவர்களின் உரிமைகளை சொல்லிக்கொடுப்பது,அறியாமையை போக்குவது போராட்டத்தை தூண்டுவதா எனவும் கேள்வி எழுப்பினார்.

இந்த சந்திப்பில் அவருடன் தந்தை பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி செயலாளர் சிவஞானம்,சமூக ஆர்வலர் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.அப்போது தமிழகம் தழுவிய அளவில் அனைத்து சுற்றுசுழல் ஆர்வலர்களையும் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த உள்ளதாகவும்,சேலம் சென்னை சாலையால் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க