• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிப்.5ல் வீட்டு உபயோக துணிவகை உற்பத்தி தொழிலுக்கு ஊதிய நிர்ணயம் குறித்த ஆலோசனைக்குழு கூட்டம்

February 3, 2021 தண்டோரா குழு

வீட்டு உபயோக துணிவகை உற்பத்தி தொழிலுக்கு ஊதிய நிர்ணயம் குறித்த ஆலோசனைக்குழு கூட்டம் வரும் 5ம் தேதி நடக்கிறது.

வீட்டு உபயோக துணிவகை உற்பத்தி தொழிலுக்கு ஊதிய நிர்ணயம் குறித்த ஆலோசனைக்குழு கூட்டம் வரும் 5ம் தேதி, பொள்ளாச்சி தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடைபெற உள்ளது என தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெங்கடேசன் கூறியிருப்பதாவது:

வீட்டு உபயோக துணிவகை உற்பத்தி தொழிலுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்வதற்கு அரசுக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு, வரும் 5ம் தேதி மாலை 3 மணிக்கு, பொள்ளாச்சி தொழிலாளர் துறை அலுவலகத்தில் ஆலோசனைக் குழுவின் 5வது கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டத்தில், நிர்வாகத்தின் பிரதிநிதிகளான வெங்கடாசலம், அசோக்குமார், பிரிட்டோ, உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதியாக மாணிக்கம் மற்றும் தங்கராஜூ, மாடசாமி ஆகியோரிடம் கருத்துக்கேட்பு நடத்தப்படும். அதன் பிறகு, திருப்பூர் மாவட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் வீட்டு உபயோகத் துணி வகை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்களை கள ஆய்வுப் பணியாக ஆய்வு மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தொழில் தொடர்புடைய பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை மற்றும் தங்களின் கருத்துகளை முன்மொழியலாம். மேலும், கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க