February 17, 2018
தண்டோரா குழு
பிப்.,21ல் கமல் மேற்கொள்ள இருக்கும் அரசியல் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் 4 பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி கட்சி தொடங்கவுள்ளதாகவும், அன்றைய தினம் ராமநாதபுரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாகவும் நடிகர் கமல்ஹாசன் ஏற்கெனவே கூறியுள்ளார். இதையெடுத்து கமல் பல்வேறு பல்வேறு முக்கிய பிரபலங்களை சந்தித்து வருகிறார்.இந்நிலையில், பிப்.,21ல் கமல் மேற்கொள்ள இருக்கும் அரசியல் பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அன்று காலை 7.45 மணிக்கு அப்துல் கலாம் இல்லத்திற்கு வருகிறார்.
காலை 8.15 மணிக்கு அப்துல் கலாம் படித்த பள்ளிக்கும் வரும் அவர் காலை 8.50 மணியளவில் கணேஷ் மஹால் பகுதியில் மீனவர்களை சந்திக்க உள்ளார்.
காலை 11.10 மணியளவில் அப்துல் கலாம் நினைவிடத்திற்கு வரும் அவர் அங்கிருந்து 11.20 மணிக்கு மதுரை கிளம்புகிறார்.
நண்பகல் 12.30 மணியளவில் ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது.
பிற்பகல் 2.30 மணியளவில் பரமக்குடி ஐந்து முனை சாலையில் லேனா மஹாலுக்கு சற்று முன் அமைந்த இடத்தில் பொதுக்கூட்டம்
பிற்பகல் 3 மணிக்கு மானாமதுரை ஸ்ரீபிரியா தியேட்டருக்கு அருகே பொதுக்கூட்டம்
மாலை 5 மணிக்கு மதுரை வேளாண்மை பல்கலைகழகத்திற்கு எதிரே உள்ள ஒத்தக்கடை மைதானத்திற்கு வரும் அவர், 6 மணிக்கு கட்சி கொடி ஏற்றுகிறார்.
மாலை 6.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இரவு 8.10 முதல் 9 மணி வரை உரையாற்ற உள்ளார்.