February 13, 2018
தண்டோரா குழு
தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் (பிப்.,15ம் தேதி) கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் பழனிசாமி பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் பிப்.15 ம் தேதி கூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்க உள்ள நிதி, மானியக் கோரிக்கைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து கலந்தாலோசித்து, கருத்து கேட்கப்பட உள்ளது. மேலும், அரசின் சாதனைகள் தொடர்பாக ஆண்டு மலர் வெளியிடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி வரும் 24ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் வர உள்ள நிலையில், நினைவு மண்டபத்திற்கான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.