April 23, 2018
தண்டோரா குழு
பிஜேபி-யிடம் இருந்து பெண்களை காப்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இன்று தால்கட்டோரா மைதானத்தில் “அரசியலமைப்பை காப்போம்” என்ற பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர்,
நாட்டில் பெண்கள்,குழந்தைகள் தொடர்பான குற்றங்கள் பெருகி வருகிறது.ஆனால் பிரதமர் மோடி வாய் திறந்து பேசாமல் மவுனம் காத்து வருகிறார்.அரசியல் சாசனத்தை பாஜக,ஆர்எஸ்எஸ் அழிக்க முற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.ஏழை,எளியோர்,தலித் மக்களின் நலனில் காங்கிரஸ் அக்கறை கொண்டிருக்கும் நிலையில்,பாஜகவோ அவர்களை தாக்குகிறது.
பிரதமர் மோடியின் இதயத்தில் தலித் மக்களுக்கு இடம் இல்லை.மத்திய அரசின் கொள்கையில் தலித் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.நாடாளுமன்றம் முடங்கியுள்ளது இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக நீதிபதிகளே நீதி கேட்கும் அவலம் ஏற்பட்டிருகிறது என்றார்.
மேலும்,பிரதமர் நரேந்திர மோடியின் புதிய சுலோகம் ‘பேட்டி பச்சோ,பிஜேபி கே லோகோன் சே பச்சோ’பெண்களை காப்போம்,பிஜேபி-யிடம் இருந்து பெண்களை காப்போம் என தாக்கி பேசியுள்ளார்.”பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் & பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” (BetiBachao, BetiPadhao) என்ற பிஜேபியின் சுலோகத்தை ராகுல்காந்தி கிண்டல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அரசியல் சாசனத்தை காப்போம் என்ற காங்கிரஸ் கட்சியின் இந்த பிரச்சாரம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி நிறைவு பெறுகிறது.
தற்போது கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கள் தலித்களுக்கு மறுக்கப்பட்டு வருவதாகவும்,மேலும் அவர்கள் தாக்கப்பட்டு வருவதாகவும் என குற்றம்சாட்டி வருகிறது காங்கிரஸ் கட்சி.எனவே,இந்திய அரசியலமைப்பை காக்கக் கோரி பிரசார இயக்கம் ஏப்ரல் 23-ம் தேதி தொடங்கப்படும் எனக் கூறப்பட்டது.