March 5, 2018
தண்டோரா குழு
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், மாணவி அனிதாவின் பிறந்தநாளான இன்று அவரை பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர். இதற்கிடையில், மாணவி அனிதாவின் வாழ்க்கை படமாகவுள்ளது. இதில் அனிதாவாக பிக்பாஸ் புகழ் ஜூலி நடிக்கின்றார்.
தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ் என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில் பெண்ணல்ல அதையும் தாண்டி புனிதமானவள் என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது.